ரங்கன ஹேரத்தின் சழலில் சிக்கி வெள்ளையடிக்கப்பட்டது அவுஸ்திரேலியா அணி !

Wednesday, August 17th, 2016

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா  அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியால் துவசம் செய்யது வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 347 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு 324 ஓட்டங்களை வெற்றியிலக்காக ஆஸிக்கு நிர்ணயித்திருந்தது..

இதில் தனஞ்சய டி சில்வா 65 ஓட்டங்களையும், லக்மால் 4 ஒட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாது அனைத்து இலக்குகளையும் இழந்து 160 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளது.

முன்னதாக இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸில் சந்திமல் மற்றும் DM .சில்வா ஆகியோரது சதங்கள் மூலம் 355 ஓட்டங்களையும் பெற்றது.

பதிலளித்தாடிய ஆஸி அணி சிமித் மற்றும் மார்ஸ் ஆகியோரது சதங்கள் மூலம் 379 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இனிங்ஸில் எட்டு இலக்குளை இழந்து 347 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

324 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலளித்தாடிய ஆஸி அணி இலஙகை பந்துவிச்சாளர்களின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாது 160 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 17 வருடங்களின் பின்னர் ஆஸி அணியை ஒரு தொடரில் முழுமையாக வென்றுள்ளதுடன் உலகின் முதன்னை அணியான ஆஸியை வெள்ளையடித்துள்ளது.  இன்றையதினம் சிறப்பாக பந்துவிசிய இலங்கை அணியின் பந்தவிச்சாளர் ரங்கனஹேரத் 7 இலக்குகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

250187

250189

250185

Related posts: