இலங்கையுடனான நிதி தொடர்பான பேச்சுக்களை விரைவாக முடிக்க முடியும் – சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை!

இலங்கையுடனான நிதி தொடர்பான பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலைகளின் சுற்றாடல்களை அண்மித்து போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முறையான திட்டத்தைத் தயார்ப்படுத்...
டெங்கு நுளம்புகளை ஒழிக்க ஜேர்மன் தொழில்நுட்பம் - சுகாதார அமைச்சர்!
தொழிற்சாலைகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு...
|
|