இலங்கையில் 941 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர் – சுகாதார அமைச்சு!

Monday, June 8th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை  ஆயிரத்து 835 ஆக அதிகதித்துள்ளதாக சுகாதார துறையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

நேற்று மட்டும் 21பேர் குறித்த நோய்த் தொற்றுக்கிலக்கானமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் இலண்டன்ிலிருந்து வருகைதந்த இருவர், கட்டார் நாட்டிலிருந்து வருகைதந்த இருவரும் பங்களாதேசிலிருந்து வந்த ஒருவர் மற்றும் குவைத்தில் இருந்த வந்த 16 பேர் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 883 பேர் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 941 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுதிரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 9 பேர் குறித்த தொற்றுக்கிலக்காகி பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: