இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு கட்டிடத் தொகுதி!

Tuesday, May 1st, 2018

இலங்கையில் 7 நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதிக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்றில் சீனாவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனமே இலங்கையுடன் கைச்சாத்திட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

குறித்த கட்டடத்தொகுதி 300 மில்லியன் ரூபா முதலீட்டில் கொழும்பு 4 இல் நிர்மானிக்கப்பட உள்ளது. 50 மாடிகளைக் கொண்ட இந்த இரட்டைக் கோபுரக் கட்டிடம் 584 அலகுகளைக் கொண்டதாகஅமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: