இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணமும் பதிவானது – நாடு முழுவதும் அச்ச நிலையில்!
Saturday, October 31st, 2020நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவண் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் 30 ஆம் திகதி உயிரிழந்த நோயாளியின் PCR பரிசோதனை அறிக்கைக்கு அமைவாக கொவிட் 19 தொற்று நோயாளி என்பது தொற்று நோயியல் பிரிவினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த இவர் 54 வயது பெண் ஆவார்.
கடந்த 29 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நாட்பட்ட நோய்களினால் அவதிப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் பதிவான 20ஆவது கொவிட் 19 தொற்று நோயாளியின் மரணமாக தொற்று நோயியல் பிரிவு உறுதி செய்துள்ளது.
000
Related posts:
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!
யாழ். மாவட்டத்தில் 37 பேருக்கு தொற்றுறுதி!
துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!
|
|