இலங்கையில் 13 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !

Sunday, November 8th, 2020

நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்து ஒன்பதாயிரத்து 749ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 537 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஏழாயிரத்து 723 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 474 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 30 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: