இலங்கையில் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிக்கு தடை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Monday, September 14th, 2020

450 க்கும் 1000 இற்கும்  இடைப்பட்ட இயந்திரவலு வேகத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு இணங்க எதிர்காலத்தில் 450 க்கும் 1000 இற்கும் இடைப்பட்ட இயந்திரவலு வேகத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்பதாக இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறான வாகனங்களைப் பதிவு செய்ய 8 இலட்சம் ரூபா வரை மிகைக் கட்டணம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாகப் பதிவு செய்யப்படாத நிலையில் உபயோகத்தில் உள்ள மோட்டார் வாகனங்கள் தொடர்பில் முறைமைக்கிணங்க அதனைப் பதிவு செய்து கொள்வதற்கு கால அவகாசம் ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: