இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாயநிலை – தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகம் கடும் எச்சரிக்கை!

Friday, January 14th, 2022

இலங்கையில் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் கொவிட் அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபுடனான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒமைக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.

அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் காரைநகர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவை...
தற்கொலை குண்டு தாக்குதலின் கோரமுகத்தை புனித அந்தோனியார் ஆலயத்தில் காணமுடிந்தது - இந்தியப் பிரதமர்!
திரவ உரத்தை இன்றுமுதல் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை - கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!