இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – பிரதமர் மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதியளிப்பு!

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்துடன் சீனா இணைந்து செயற்படும் என்றும் சீன பிரதமர் உறுதியளித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள், சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|