இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அதிர்ச்சித் தகவல்!

Monday, November 20th, 2023

குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் சுமார் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற பல காரணிகள் பதின்ம வயது தாய்மார்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்ததாகவும் என்று அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் 124,482 குழந்தைகளை உள்ளடக்கிய 89,164 ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் உள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குமாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: