இலங்கையில் சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு ஆபத்து – பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்!

Saturday, May 23rd, 2020

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கவசாகி நோய் பரவ கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு ஐந்து நாட்களுக்கு அதிகமாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, நாக்கு சிவப்பு நிற ஸ்ட்ரோபரி பழம் போன்று காணப்பட்டால் கவசாகி நோய் அறிகுறிகளாக இருக்கும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் கவசாகி நோய் ஏற்பட கூடும் என்பதனால் கொரோனா பரவிய பிரதேசங்களில் சிறுவர்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துமாறு விசேட வைத்தியர் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

இது சுய நோய் எதிர்ப்பு சக்தி நோய் என்பதனால் அது சிறுவர்களின் இதயத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் எனவும் இது தொடர்பில் மிகவும் தீவிர அவதானம் செலுத்த வேண்டும். வைத்திய சிகிச்சைக்காக சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

கவசாகி நோய் தொற்றுக்குள்ளாக சிறுவர்கள் சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts: