இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்!

Friday, March 9th, 2018

 

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 23கிலோ தங்கத்துடன் சந்தேகத்துக்குரிய நான்கு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்னர்.

குறித்ததங்கம் தமிழக வருவாய்துறை அதிகாரிகளால் சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்துக்குரியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் குறித்த தங்கம் கடத்தி வரப்பட்டதாகவும் பின்னர் இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு சேது கடுகதி ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட போதுகைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். கடந்த 30 நாட்களில் மாத்திரம் 53கிலோ தங்கத்தை தமிழகவருவாய்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.

Related posts: