இலங்கையின் 70வது சுதந்திர தினம் உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.

Sunday, February 4th, 2018

யாழ்.மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

முப்படைகளின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்களின் இன்னிசை வாத்திய இசை இசைக் கப்பட்டு பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

காலை 8.30 மணயிளவில், பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்குரே மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியயோர் இணைந்து , தேசிய கொடியினை ஏற்றி வைத்தனர். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டன. அதன்பின்னர்,? அரசாங்க வடமாகாண ஆளுநர் மற்றும்  அதிபரின் உரைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், முப்படைகளின்  அதிகாரிகள்,  பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: