இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022

இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார தன்மையினை ஸ்தீரப்படுத்தல்,பொருளாதார மேம்பாட்டிற்காக செயற்படுத்த வேண்டிய முக்கிய விடயங்களை செயற்படுத்துவததன் அவசர தேவையை சர்வதேச நாணய நிதியம் எடுத்துரைத்துள்ளது. இலங்கையுடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்படும் சகல ஆலோசனைகளையும் விவாதிக்க தயாராகவுள்ளோம்.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வெளிநாட்டு கையிருப்புக்களை ஸ்தீரப்படுத்திக்கொள்ளல், சந்தை வசதிகளை விரிவுப்படுத்தல்,நிர்வாக முறைமையை சீர்செய்யல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது.இலங்கையுடன் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை இணக்கப்படான தன்மையில் உள்ளதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்து இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மீளாய்வு மற்றும் தீவு நாடுகளின் பொருளாதார மதிப்பீடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

முன்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் சாதக மற்றும் பாதக காரணிகளை ஆராய்ந்து நிதியத்துடன் இணக்கமாக செயற்பட தீர்மானித்துள்ளதான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது உறுதியளித்தார்.

பொருளாதார நிலைமை மோசடைந்துள்ள பின்னணியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளல் மற்றும் கடன் செலுத்தல் குறித்து சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், நட்பு நாடுகளுடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்

சர்வதேச நாணய நிதியத்தின் சாதக மற்றும் பாதக காரணிகளை ஆராய்ந்து நிதியத்துடன் இணக்கமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்வரும் மாதம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா – வொஷிங்டன் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: