இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா நியமனம்!

Saturday, October 13th, 2018

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நளின் பெரேரா, இலங்கையின் 46 ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதியாக நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை பெற்ற நளின் பெரேரா, பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: