இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Friday, July 15th, 2022

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது.

விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை. இந்த நிலையில் அது குறித்து உறுதிப்பாடு அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பதிவினை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்க சுற்றுலா அபிவிருத்தி ...
அரசாங்க வேலைத்திட்டங்களை சீர்குலைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் - ஜனாதிபதி ரணில் வ...
ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளை பாதுகாக்க போவதில்லை - நான் பதவிக்கு வந்தால் நேட்டோவில் இருந்தும் விலகுவேன...