இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையீடு செய்யப்போவதில்லை – இலங்கைக்கான சீன தூதரகம் அறிவிப்பு!

Monday, April 12th, 2021

தமது நாட்டு தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை பயன்படுத்துவதா இல்லையா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தாம் தலையீடு செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் ஊடகப்பேச்சாளரும் அரசியல் பிரிவுத் தலைவருமான லு சொங், மேலும் கூறுகையில்-

“இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரிலேயே சீன அரசாங்கம் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்திருந்தது.

இந்த தடுப்பூசியை யாருக்கு எங்கு எப்படி வழங்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.

அது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். அதில் சீனா ஒருபோதும் தலையிடப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீன தடுப்பூசிக்கு மருத்துவ நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: