இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா கால எல்லை 5 வருடங்களாக அதிகரிப்பு!

Thursday, June 30th, 2022

இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் விசா தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த விசாவிற்கான கால எல்லையை நீடிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விசாவிற்கான ஒரு வருட கால எல்லையானது 5 வருடங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த கால எல்லை அதிகரிப்பானது எதிர்வரும் 4ஆம் திகதி முதல் வரும் எனவும் அமைச்சர் தம்மிக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கல் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


விசாரணைகளில் அலட்சியம்: யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட  அனைவருக்கும் தண்டனை...
வீசா நிபந்தனைகளை மீறிய குற்றத்தில் குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கை...
ஓமான் நாட்டுடன் 3.6 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்து : டீசலுக்கு 35,...