இலங்கைக்கு வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ!

Monday, May 13th, 2024

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார்

அதன்படி இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளார்

இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது

000

Related posts: