இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு!

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு கிழக்காக 300 கிலோமீற்றர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
அத்துடன் குறித்த அதிர்வு ரிக்டர் அளவீட்டு கருவியில் 4.8 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
சுமார் 50 கிலோமீற்றர் ஆழ்கடல் பகுதியில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பில் தெளிவுபடுத்தும், வோல்கெனோ டிஸ்கவரி என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும், மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இந்த நில அதிர்வை உணரக்கூடிய பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், குறித்த பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு - அதிக மரணங்கள் கொழும்பில் பதிவு!
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் - பிரதமர் மகி...
|
|