இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்க விசேட வர்த்தமானி!

Friday, April 29th, 2022

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவர் மேலும் உரையாற்றுகையில், வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கொடுப்பனவுகளுக்கும் தேவையான அத்தியாவசிய வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளிடமும் கோரிக்கை விடுக்கப்படும்.

அனைத்து வெளிநாட்டு நாணய பணப் பரிமாற்றங்களையும் வங்கி முறையின் ஊடாக செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக கட்டாய வெளிநாட்டு நாணய மாற்றத்தை இரத்து செய்வது குறித்து மத்திய வங்கி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: