இரு நாள் விஜயமாக சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை – பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!
Wednesday, December 15th, 2021இலங்கைக்கான சீன தூதுவர் உட்பட தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயத்தின் போது இன்று மதியம் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்காண விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்பதாக இன்று யாழ்பாணத்திற்கு சீனத்தூதுவர் கீ சென்ஹொங் விஐயம் செய்திருந்த நிலையில் அவரது வருகைக்காக வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங், யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று வடக்கிற்கு விஐயத்தை முன்னெடுத்திருந்தார். குறித்த நிவாரணப் பொருட்கள் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் வழங்கப்படவுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர் அங்கிருந்து யாழ்நோக்கி பயணமாகியிருந்தார்.
இந்நிலையில் அவரது வருகைக்காக வடக்கின் நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|