தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த பங்களிப்பை வழங்க வேண்டும் – அழைப்பு விடுக்கின்றார் வேட்பாளர் ஜெயகாந்தன் !

Friday, June 26th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றும் தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த பங்களிப்பை வழங்கவேண்டும்  என கட்சியின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான மருதயினார் ஜெயகாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துவரும் நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

ஊர்காவற்றுறை தொகுதியானது எமது கட்சியியுடன் மிக நெருக்கமான உறவை கொண்ட ஒரு பகுதியாகும். கடந்தகாலங்களில் இங்குள்ள மக்களின் அனைத்து தேவைகளையும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா முடியுமானளவு நிறைவேற்றி கொடுத்துள்ளமையினாலேயே இன்று இப்பகுதி மக்கள் குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் அனைத்து துறைகளிலும் போட்டியிட்டு திறளைப் பெற்றிருக்கின்றது.

ஆனாலும் மக்களிடம் இன்னமும் அதிகளவான அபிவிருத்திகளும் வாழ்வாதார தேவைகளும் இருக்கின்றன. இவற்றை நாம் முழுமையாக தீர்த்துவைக்கவேண்டுமானால் எமக்கு அதிகள அரசியல் பலம் அவசியமானதாக உள்ளது.

கடந்த காலங்களில் எமக்கு கிடைத்த ஓரளனவான அரசியல் பலத்தைகொண்டு எண்ணெற்ற பெரும்பணிகளை மக்களுக்கானதாக செய்த எமக்கு அப்பணியை முழுமையடையச் செய்வதற்கு மக்கள் வழங்கும் அதிகளவான அரசியல் பலத்தையே எதிர்பாரக்கின்றோம்.

அந்த அரசியல் பலத்தை நாம் பெறுவதற்கு, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா திகழ்வதற்கு தீவக மக்களின் ஒருமித்த பங்களிப்பு மிகவும் அவசியமானது.

அந்தவகையில் இம்முறை தீவக மக்கள் எமக்கு தமது முழுமையான வாக்ககளை வழங்கி எமது தலைவரின் கரங்களை அரசியல் ரீதியில் பலப்படுத்தவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றும் வேட்பாளர் மருதயினார் ஜெயகாந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: