இரு துருவங்களும் நேருக்கு நேர் சந்திப்பு: ஆரம்பமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்கள்!

Tuesday, June 12th, 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் –  வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

சிங்கப்பூரில் செந்தோசா தீவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

குறித்த சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது அணுவாயுத சோதனையை நிறுத்தல் மற்றும் வடகொரியா மீதான தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

வரலாற்றில் முதற்தடவையாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் இடம்பெறும் இந்த சந்திப்பின் பொருட்டு சுமார் 2 ஆயிரத்து 500 ஊடகவியலார்கள் சிங்கப்பூர் சென்றுள்ளதாக  ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

gallerye_071202516_2039355

Related posts:

கூடுகிறது அமைச்சரவை - இலங்கையின் எதிர்காலம் குறித்து இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப...
கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவி...
மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை - செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய...