இராணுவத்தினர் மீது தாக்குதல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்!!

Sunday, August 18th, 2019

இளைஞர் குழுவொன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ். பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இத் தாக்குதல் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் கடையொன்றில் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று இத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு, வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts: