இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு!

Friday, June 4th, 2021

இராஜாங்க அமைச்சுக்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது ஒவ்வோர் இராஜாங்க அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் அடையப்பட்ட இலக்குகள் தொடர்பாகவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், இராஜாங்க அமைச்சர்கள் விளக்கியிரந்தானர்.

அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்த குறித்த சந்திப்பின்போது  கொவிட் நோய்த்தொற்றுக்கு மத்தியில் தமது அமைச்சுக்கள் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை – பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து தாம் முன்கொண்டு செல்வதற்காக, பல்வேறு வேலைத் திட்டங்களைத் தாம் நடைமுறைப்படுத்தி வருவதனை இராஜாங்க அமைச்சர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: