இலங்கை – கனடாவுக்கு இடையே இரு தரப்பு பேச்சுவார்தை!

Saturday, June 10th, 2017

இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

வெளிவிவவார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்குக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த மக்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் இந்தச் சந்திப்பின்போது அனுதாபம் தெரிவித்துள்ளார் அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனேடிய அரசாங்கம் 67.1 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறித்தும் கனேடிய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts:


மாதச் சம்பளம் ஒன்றரை இலட்சம் பெறும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது...
இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் - இராணுவ ஊடகப் பேச்சாளர்!
பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் - இராஜாங்க அமைச்சர்...