இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை – இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தென்னிந்தியா மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே பிராந்திய மற்றும் சர்வதேச விமான சேவைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக சில விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: