இரண்டு கோடி லஞ்சம் பெற்றதன் மூலமே கூட்டமைப்பின் மோசடித்தனம் மக்களுக்கு வெளிவந்தது – கோவிலாக்கண்டி கிராமவாசி!

Wednesday, February 7th, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள முரண்பாடுகளும் பிரச்சினைகளும் மோசடிகளும் இன்று 2 கோடிரூபா  அரசிடமிருந்து பெற்ற லஞ்சம் மூலமே வெளிவந்துள்ளது என கோவிலாக்கண்டி கிராமவாசியான செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இன்று பாரியதொரு குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்குள்ளான பிரச்சினைகள் பூதாகரமாக வெளிவந்துள்ள நிலையில் அவர்களது மோசடிகளும் போலித்தனங்களும் மக்களது அபிவிருத்திக்காக அரசினால் வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தையும் அவர்களே சுருட்டியெடுத்துள்ளனர் என்பதை வெளிக்கொண்டுவந்துள்ளது.

அந்தவகையில் தற்போது இரண்டு கோடி நிதியை ஏப்பமிட்ட செய்தி வெளிவந்துள்ளது. இதேபோன்று இவர்கள் கடந்த காலங்களில் எவ்வளவு கோடிகளை சூறையாடியுள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

எனவே மக்கள் மீது அக்கறையும் தற்துணிவுடன் மக்கள் பணி செய்துவருபவருமான ஒரு சிறந்த அரசியல் தலைமையாக இருக்கின்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுமே மக்களின் பேராதரவை பெற்றுள்ள கட்சியாக இன்று இருக்கின்ற நிலையில் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவதே எமது மக்களின் நிலைப்பாடாக உள்ளது. அந்தவகையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது ஆணையை வீணைச் சின்னத்திற்கு வழங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறவைக்க உழைப்போம் என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – தேசியத்தின் பெயரால் நாம் ஒருபோதும் மக்களிடம் வாக்குக் கேட்டு அவர்களை ஏமாற்றத் தயாரில்லை. எம்மால் முடிந்தவற்றை நடைமுறைச் சாத்தியமான முறையில் மக்களிடம் கொண்டு சென்று மக்களிடமிருந்து எமக்கான அரசியல் அதிகாரங்களைப் பெற்றுவருகின்றோம். அவ்வாறாக நாம் குறைந்தளவான ஆதரவை பெற்றாலும், பொய்த்தனமான வாக்குறுதிகளூடாக அதிக ஆசனங்களைப் பெற்ற சக தமிழ் கட்சிகளால் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

DSC_0280 DSC_0320 DSC_0274

Related posts: