இரண்டாவது தலசீமியா வைத்திய மத்திய நிலையம் கண்டியில்!

Monday, May 8th, 2017

கண்டி வைத்தியசாலை வளாகத்தில் தலசீமியா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வைத்திய மத்திய நிலையம் நிர்மாணிக்கும் நடவடிக்கை, இன்றையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தலசீமியா நோயாளர்களுக்கு எலும்பு பொருத்துவதற்காக கண்டியில் ஆரம்பமாகும் முதலாவது சிகிச்சை நிலையம் இதுவாகும். ஆறு மாடிகளை கொண்ட இந்த சிகிச்சை நிலையத்தை முழுமையான வசதிகளுடன் நிர்மாணிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், முதல் கட்ட பணிகளுக்கு 856 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தலசீமியா நோயாளர்களுக்கு எலும்பு பொருத்துவதற்கான முதலாவது சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலையில் இயங்கி வருகின்றது.இந்த நிலையில், நிலையில் இரண்டாவது சிகிச்சை நிலையம் கண்டி வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. நடைபெறும் ஆரம்ப நிகழ்வுகளில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்

Related posts: