இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பினாலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தாலும் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் எந்தளவு அறிவுடையவர்களாக இருப்பினும் முடக்கநிலை தளர்த்தப்பட்ட நேற்றைய நாளில் அவர்கள் நடந்துகொண்ட விதம் திருப்தி அடையும் வகையில் இருந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக இடைவெளியை பேணுவதில் மக்கள் நேற்றைய தினத்தில் முழுமையான அக்கறை காட்டவில்லை எனவும் வாகன போக்குவரத்தின் போதும் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றையதினத்தில் மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதியின...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி!
|
|