இயற்கை உரம் இறக்குமதித் தடை விவகாரம் – இலங்கையுடனான உறவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரம் தொடர்பான சர்ச்சை காரணமாக , இலங்கையுடனான தனது இருதரப்பு உறவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

சீனா நிறுவனத்திடமிருந்து உரங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தடைவிதித்துள்ளதால் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை எனவும் இலங்கைக்கான சீன தூதரக பேச்சாளர் லுவோ சொங் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனா எச்சரித்தது என்ற வதந்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள அவர் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகள் வரலாற்று ரீதியானவை வலிமையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரஸ்பர நன்மதிப்பின் அடிப்படையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் வலிமையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போராட்டங்கள் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை குறிப்பிட்ட உரத்தினை இறக்குமதி செய்த சீவின் நிறுவனம் மிகவும் தகுதிவாய்ந்தது பல தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளது எனவும் சீன தூதுரக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செய்தி!
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிருங்கள் - அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜன...
உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சி – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்- - யாழ். ...