இம்முறை யாழ்ப்பாணத்தில் பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை!

Sunday, April 16th, 2017

சித்திரை புதுவருட கொண்டாட்டங்களின் போது யாழ்ப்பாணத்தில் பாரிய குற்றச் செயல்கள் எதும் இடம்பெறவில்லை என யாழ். மாவட்ட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் ஆலயங்கள், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், குழப்பங்களை விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சித்திரை புத்தாண்டின் போது பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: