இன, மதம் அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை பதியாதிருக்க தீர்மானம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் !

Thursday, March 18th, 2021

எதிர்வரும் காலங்களில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  அவ்வாறான அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கு, கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்..

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்கள், தேசிய மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: