இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு – ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்தும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, June 1st, 2022

நாட்டில் இன்று புதன்கிழமை 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் நாளைமுதல் மீண்டும் மின்வெட்டு அட்டவணை மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 02ஆம் திகதி முதல் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 02 ஆம் திகதிமுதல் 05ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணையின்படி ஜூன் 02 மற்றும் 03ஆம் திகதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 04ஆம் திகதி ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஜூன் 05 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: