இன்று நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

rain_1 Monday, October 17th, 2016

இன்று நாட்டில் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றைய (16) தினமும் நாட்டின் பல பாகங்களுக்கும் மழை பெய்துள்ளது. சில பகுதிகளுக்கு 50 முதல் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இடி மின்னலுடன் மழை ஆரம்பிக்கும் போது வேகமாக காற்று வீசும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் நிலவி வரும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும், நேற்று முன்தினம் (15) முதல் மழையுடன் கூடிய கால நிலை ஆரம்பித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

rain_1


கோண்டாவில் தண்டவாளத்தில் உறங்கிய  இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கையர் தொடர்பில் விசாரணை!
சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால்  நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
தபால் ஊழியர்ககளும் வேலை நிறுத்தத்தம்!
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!