இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்!
Monday, August 6th, 2018
நாடுமுழுவதும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
பரீட்சை வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து செய்யப்படும் வாகனங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 321,469 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
பரீட்சை நிலையத்திற்கு ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், டிஜிட்டல் கருவிகள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டனவற்றை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், மோசடிகள் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts: