இன்று அமைச்சரவை மாற்றம்!

Sunday, February 25th, 2018

தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இன்று அமைச்சரவை மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன.

இம்முறை அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, அரசாங்கத்தை வீரியத்துடன் கொண்டு நடத்தும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முக்கிய, அதிகூடிய வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளைத் தொடர்ந்து அமைச்சரவையில் மறுசீரமைப்பை உருவாக்க தேசிய அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. அமைச்சரவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: