இன்றும் 13 பேக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு!

Saturday, April 25th, 2020

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நேற்றையதினம் 52 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் தொற்றாளர்களது எண்ணிக்கை  420 பதிவாகியிருந்த நிலையில்  இன்றையதினம் இதுவரை மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையின் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: