இன்றும் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, February 24th, 2022

சுழற்சி முறையில் இன்றும் (24) நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றையதினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு  4 மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: