சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 வெதுப்பகங்களுக்கு அபராதம்!

Thursday, December 22nd, 2016

சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 4 வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தலா 10ஆயிரம் ரூபா வீதம் 40ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்பளித்தது. கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 5 அம் திகதி திங்கட்கிழமை இரவு 9 மணியளவிலிருந்து அதிகாலை 1.30 மணிவரை நல்லூர் பிரதேசங்களுக்குட்பட்ட வெதுப்பகங்களில் நல்லூர்     பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் நல்லூர், கொக்குவில், கோண்டாவில் பகுதி சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து நடாத்திய திடீர் தேடலின் போது இந்த 4 வெதுப்பகங்களும் சிக்கிக் கொண்டன. இவைகள் மீது நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  4 வெதுப்பக உரிமையாளர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து தலா 10ஆயிரம் ரூபா வீதம் 40ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

Gallery-1093-original-1ff7b91c979ea344298826c212adf745783ae8a14a3eded36d56ba1b0f4bdeee copy

Related posts:

இரண்டாம் கட்ட 5000 ரூபா இடர்கால கொடுப்பனவு நிச்சயமாக வழங்கப்படும் – யாபழ் மாவட்ட மக்கள் அச்சமடைய தே...
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் – கல்வி அமைச்சர் ...
வுனியாவில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள் - நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு ...