இன்றுமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை – இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிப்பு!

Friday, February 18th, 2022

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமைமுதல் ஒன்லைனில் ரயில் பயண சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ளமுடியும் எனவும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும் எனவும் இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: