இனிமேல் புகையிரதங்களில் யாசகம் புரியத் தடை!

Monday, June 18th, 2018

புகையிரத நிலையங்களிலும், புகையிரதங்களிலும் யாசகம் புரிவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாசகம் புரிவது போல் வந்து சிலர் பயணிகளின் பொருட்களை திருடிச் செல்வதாக போக்குவரத்து அமைச்சிற்கு பல முறைப்பாடுகள் சென்றுள்ளன. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: