இந்த வருடம் மாகாண சபைத் தேர்தல் இல்லை – அமைச்சர் முஸ்தபா

Tuesday, June 19th, 2018

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடம் இடம்பெற வாய்ப்பில்லை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்னர் எல்லை நிர்ணய அறிக்கை விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய புதிய முறையில் தேர்தலை நடாத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். துரிதமாக எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு அரச தலைவர் பணித்துள்ளார்.
ஆனால் அது நடைபெறவில்லை. கட்சித் தலைவர்கள் இதுபற்றி முடிவெடுக்கவில்லை. பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்றால் கூட அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: