இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை – சொத்துக்கள் பறிமுதல் – பருத்தித்துறை நீதிமன்று உத்தரவு!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மீனவர்கள் பத்து ஆண்டுகளுக்குள் இலங்கை கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டால் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவிடப்பட்டது.
அதேவேளை, மீனவர்கள் பயணித்த படகுகள் இரண்டு, இழுமடி உட்பட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படுவதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
மீனவர்களை தாயகம் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை இந்தியத் துணைத்தூதரகம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|