இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
Thursday, June 16th, 2022இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு பல்வேறு கட்டங்களாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|