கிளிநொச்சி குளத்தினை ஆழமாக்கப்படுவதனூடாகவே குடிநீர்த் தட்டுப்பாட்டைநிவர்த்திசெய்யமுடியுமெனசூழலியலாளர்கள் சுட்டிக்காட்டு!

Sunday, June 25th, 2017

கிளிநொச்சிகுளத்தினைஆழமாக்கிநீரைத் தேக்குவதனூடாக இம்மாவட்டத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைபெரும்பாலும் நிவர்த்திசெய்யமுடியுமெனசூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சிக் குளத்தில் தேங்கியுள்ளகுப்பை கூழங்களையும்,மணலையும் அகற்றுவதனூடாகவும்,ஆழமாக்குவதனூடாகவுமே இக்குளத்தில் நீரைத் தேக்கிவைக்கமுடியும்.

விவசாயநடவடிக்கைகளுக்கும், ஏனைய பயன்பாடுகளுக்கும்; இரணைமடுக்குளத்திலிருந்துபெறப்படும் நீரினால் நிரப்பட்டு மூன்றாம் வாய்க்கால் தொடக்கம் உருத்திரபுரத்தின் பத்தாம் வாய்க்கால்,குஞ்சுப்;பரந்தன்,பெரியபரந்தன் ஆகியபகுதிகளுக்குகிளிநொச்சிக் குளத்திலிருந்தேநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இக்குளத்தினைஆழமாக்கவேண்டியதன் அவசியம் தொடர்பாகமாவட்டஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தொடர்ச்சியாககோரிக்கைள் முன்வைக்கப்பட்டுவருகின்றபோதிலும்இதுவரையில் உருப்படியாகஎதுவும் நடக்கவில்லையெனவிவசாயசங்கங்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையேகுளத்தில் போதியளவுநீர் இல்லாதகாரணத்தினால் நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் தமதுகுடும்பங்கள் பொருளாதாரரீதியில் பாரியநெருக்கடிகளுக்குமுகங்கொடுத்துவருவதாகவும் நன்னீர் மின்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இக்குளத்தினைஆழமாக்குவதனூடாகவும்,குப்பை கூழங்களைஅகற்றுவதனூடாகவுமேகிளிநொச்சிநகரத்திலுள்ளகிணறுகளின் நீர் மட்டத்தைகுறைவடையாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியுமென்பதுடன், இதனைஉணர்ந்துகொண்டுதுறைசார்ந்தவர்கள் உரியநடவடிக்கையினைஎடுக்;கவும்முன்வரவேண்டும்;

இவ்வாறானசெயற்பாடுகளினூடாகவேஎதிர்காலங்களில் குடிநீர் மட்டுமன்றி ஏனைய தேவைப்பாடுகளுக்கானநீர்த் தட்டுப்பாட்டுக்குகுறிப்பாகவிவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்புபோன்றபிரச்சினைகளுக்குதீர்வைபெரும்பாலும் எட்டமுடியுமென்றும் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: