இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு!

Saturday, September 26th, 2020

இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து தெளிவுபடுத்தக் கோரி தம்புல்ல பொலிஸ் மற்றும் நுகர்வோர் விவகார ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டீசலில் மண்ணெண்ணெய் வாசம் வருவதாகவும், உண்மையில் மண்ணெண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சோதனை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தம்புல்ல பகுதியில் உள்ள பல எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பும் போது மண்ணெண்ணெய் வாசனை வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புல்ல காவல்துறையினர் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், இந்த விவகாரத்தை ஆராய்ந்த பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: