இந்தியா படு தோல்வி : கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

Sunday, June 18th, 2017

 

2017 சம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் அபார வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்று கொண்டது.அணி சார்பில் பகர் ஜமான் 114 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.அணி சார்பில் ஹார்டிக் பாண்டியா 76 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் அணி கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது

Related posts: