இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, June 8th, 2023

இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருவதால், 2030 ஆம் ஆண்டளவில் இந்தியா-இலங்கை கிரிட் இணைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை புரிந்து கொள்ள உலக வங்கி இலங்கை மின்சார சபைக்கு (CEB) உதவி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: